திங்கள்முதல் சிலிண்டரின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படும் – லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு!
Saturday, August 6th, 2022
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, தற்போது நான்காயிரத்து தொள்ளாயிரத்து பத்து ரூபாயிற்கு விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 200 ரூபாயிற்கு மேல் குறைக்கப்படவுள்ளது.
எரிவாயு பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நாடு முழுவதும் இரண்டரை மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
முத்துராஜவெலயில் அமைந்துள்ள லிட்ரோ எரிவாயு முனையத்தில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வட் வரித்திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றில் நிறைவேற்றம்!
இலங்கைளில் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவு!
இலங்கையில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் த...
|
|
|


