தலைநகரிலிருந்து  யாழ்ப்பாணம் செல்ல ஐந்து மணித்தியாலங்கள்!

Wednesday, December 14th, 2016

வடக்கு இரட்டை ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கு ரயில் பாதையின் போக்குவரத்தை வினைத்திறனாக மேற்கொள்வது இதன் நோக்கமாகும். இதற்கென 100 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான பயண நேரத்தை ஐந்து மணித்தியாலங்கள் வரையாக குறைப்பதே இதன் நோக்கமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு வரையிலான ரயில் பயணத்திற்கான கால எல்லை ஆறு மணித்தியாலங்களாக காணப்படுகிறது. இதனை ஐந்து மணித்தியாலமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

train-engine-p

Related posts: