தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் மேலும் நீடிப்பு – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தகவல்!
Thursday, June 29th, 2023
ஆறு மாத காலத்துக்காக வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் நாளை (30) வரையான காலப்பகுதியில் வௌியிடப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியான நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மெக்ஸிக்கோ மக்களுக்கு நியூயோர்க்கிலிருந்து ஜனாதிபதி அனுதாபம்!
இலங்கை, பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டியமைக்கு சர்வதேச நாணய நிதிய பிரதானி மகிழ்ச்சி தெரிவிப்பு!
பாடசாலை சீருடை விநியோகம் ஜூலை 12 க்கு முன்னர் பூர்த்தி - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


