கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த 98 இலங்கையர்கள் மரணம் – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

Thursday, November 12th, 2020

!

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் பணியாற்றிவந்த சுமார் 98 இலங்கையர்கள் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதில் அதிகளவான மரணங்கள் சவுதி அரேபியாவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் சவுதி அரேபியாவில் மாத்திரம் 34 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 பேரும், கட்டாரில் 6 பேரும், ஓமானில் 4 பேரும், பஹரைன் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் தலா இருவர் வீதமும், இஸ்ரேலில் ஒரு இலங்கையரும் உயிரிழந்துள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று பிரித்தானியாவில் வசித்து வந்த ஐந்து இலங்கையர்கள் கொவிட் 19 காரணமாக மரணித்துள்ளதோடு, அமெரிக்கா மற்றும் கனடாவில் தலா நான்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதனிடையே ஜேர்மன் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா இவ்விரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதோடு, ஈரானில் ஒருவர் மரணித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: