மெக்ஸிக்கோ மக்களுக்கு நியூயோர்க்கிலிருந்து ஜனாதிபதி அனுதாபம்!

Thursday, September 21st, 2017

மெக்ஸிகோவில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் இதுவரை 226 பேர் உயிரிழந்துள்ளதுடன், மெக்ஸிகோ தலைநகரில் பாரிய அளவு கட்டடங்கள் உடைந்து விழுந்துள்ளன.

7.1 மெக்னடியுட் அளவில் பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தினால் மெக்ஸிகோ தலை நகரில் பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன் தொலைபேசி தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மெக்ஸிகோ பூகம்பத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் அனுதாபம் வெளியிட்டுள்ளார்.

மெக்ஸிகோவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து எனது இதயம் வலித்ததாகவும், அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் சென்றுள்ளார்.இந்த நிலையில் நியூயோர்க்கில் இருந்து கொண்டு மெக்ஸிகோவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

 

 

Related posts: