தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்களும் ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பம் – கல்வி அமைச்சு!

2021 ஆம் ஆண்டின் பாடசாலையின் புதிய தவணை ஜனவரி 11ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சசு அறிவித்துள்ளது.
அத்துடன் தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்களும் அன்றையதினம்முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கான பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குமாறு அதிபர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் மேல் மாகாணத்தில் கொழும்பு கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளும் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்குரிய பாடவிதானங்களை நிறைவு செய்யாத பாடசாலைகள் இருக்குமாயின் அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதிக்குள் இதற்காக முறையான திட்டமொன்றை முன்னெடுக்குமாறும் மாகாண அதிகாரிகளுக்கும் அதிபர்களுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
இது பற்றிய மேலதிக தகவல்களை அடங்கிய சுற்றுநிருபமும் பாடசாலை நடவடிக்கைகளை உள்ளடக்கிய நாட்காட்டியும் கல்வி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|