கனடாவில் பனை உற்பத்திகளை சந்தைப்படுத்த கடைத் தொகுதி – பனை அபிவிருத்தி சபைத் தலைவர் தெரிவிப்பு!

Monday, September 21st, 2020

கனடாவில் யாழ் மாவட்டத்தின் பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தக்கூடிய இரு கற்பகங்களை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிரிஷாந்தி பத்திராயா தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை யாழ் மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற பனை உற்பத்தியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த மாதம் 5000 கிலோ பனம் கட்டி வெளிநாட்டு  களுக்கு அனுப்பத் தேவைப்பட்டது எனினும் 2000கிலோ பனம் கட்டியே எமக்குக் கிடைத்தது.

யாழ்ப்பான பனை உற்பத்திப் பொருட்களுக்கு தெற்கில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் சிறந்த கேள்வி  நிலவுகின்ற நிலையில் குறித்த துறையை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கு அனைவரும் தமது சொந்தத்  துறையாக பனைக் கூட்டுறவைக் கருதி முன்னேற்ற வேண்டும். பனை உற்பத்தியாளர்களை ஊக்கிவிக்கும் பொருட்டு அரசாங்கம் சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்று தரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் நீர்கொழும்பில் புதிய கற்பகதருக் கடைத் தொகுதி  திறக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.

அங்கு கருத்துத் தெரிவித்த பனம் உற்பத்தியாளர்கள் அரசாங்கம் கித்துள் உற்பத்திக்கு மானியம் வழங்குகிறது பனம் உற்பத்திக்களுக்கு மானியம் வழங்குவதில்லை. இதனால் பனை உற்பத்தியாளர்கள் தொழில் நீதியான நெருக்கடிகளுக்கும் வாழ்வாதார நீதியான நெருக்கடிகளுக்கும் உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது

அதுமட்டுமல்லாது கித்துள் உற்பத்திகளுக்கு வரிவிலக்கை அரசாங்கம் வழங்கியுள்ளதுடன் பனை உற்பத்திப் பொருட்களுக்கும் தொழில் நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் வரி அறவிடுகின்றது.

இலங்கை மது வரி சட்டத்தில் கித்துள் பாணி உள்ளடங்காத போதிலும் பதநீர் மதச் சட்டத்தில் உள்ள ஏற்கப்பட்டுள்ளது. பனையில் இருந்து எடுக்கப்பட்ட பதநீரானது 11மணித்தியாலத்திற்கு பின்னரே மதுவாக மாறுகின்ற நிலையில்   மருத்துவ குணங்கள் உடைய இயற்கை பானமாக பலரும் இதை அருந்துகிறார்கள்.

ஆகவே அரசாங்கம் பனை உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு சலுகைகளை வழங்கும் பட்சத்தில் குறித்த உற்பத்தி துறையை வீழ்ச்சி அடையாமல் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related posts: