கர்ப்பிணி ஆசிரியைகளின் ஆடைகளுக்கு அதிபர்கள் எதிர்ப்பு: கல்வியமைச்சு கவலை

Thursday, January 31st, 2019

கர்ப்பணி ஆசிரியைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆடைகளை பாடசாலைக்கு அணிந்து வருவதற்கு சில அதிபர்கள் தடை விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களின் தொழில் கௌரவம், சம்பிரதாயம் மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்படும் வகையில் வைத்தியர்களின் பரிந்துரைப்படியும் பாடசாலை ஆசிரியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட குறித்த ஆடையை தடை செய்வது கவலைக்குரிய விடயம் எனவும் இதனால் கர்ப்பிணி ஆசிரியைகள் கஷ்டத்திற்குள்ளாவதாகவும் கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.
எனினும் எவ்வாறான விதத்திலும் குறித்த ஆடைகளுக்கு தடை விதிக்க அதிபர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை எனவும் அவ்வாறான தடைகள் விதிக்கப்பட்டால் அதிபர்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் உடனடித் தொடர்பு இலக்கமான 1988 என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



Related posts: