தமிழ் மக்களின் சாபக்டோன சில ஊடக பிரச்சாரங்களின் மத்தியிலிருந்தும் எழுச்சி பெற்றுள்ளார் டக்ளஸ் தேவானந்தா – கோவை நந்தன்

Tuesday, May 10th, 2016

கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படி மக்களுடன் மக்களாக நின்று தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து மக்களை நல்வழிப் பாதையில் கொண்டு சென்றார்களோ அதேபோன்றதொரு செயற்திட்டத்துடன் பாசிஷ போராட்ட காலத்திலும்சரி 2009ஆம் ஆண்டிற்குப் பின்னரான இந்த ஜனநாயக காலத்திலும் சரி ஒரேவழியில் நின்று தனது இலட்சியப் பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றார் டக்ளஸ் தேவானந்தா.

இன்றைய தேசிய எழுச்சி மாநாட்டை பார்க்கும் போது அந்தக் காலம்தான் நினைவுக்கு வருகிறது என ஊடகவியலாளர் கோவை நந்தன் தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது இருக்கும் அரசியல் கட்சிகள் தேசியம் பேசுகின்றன. தேர்தல் நேரத்தில் வந்து மக்களைச் சந்தித்துக் கூட்டம் கூட்டுகின்றன. ஆனால் தேர்தல் இல்லாத நேரத்திலும் தேர்தல் எமது நோக்கல்ல மக்கள் பணியே எமது செயற்பாடு என்ற நோக்கோடு செயற்பட்டுக்கொண்டிருக்கிற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய உங்கள் மத்தியில் ஊடகமும் கட்சியும் என்ற விடயத்தைப் பற்றி பேசுமாறு என்னைக் கேட்டுள்ளார்கள்.

யாழ்.மாவட்டத்தின் சாபக்கேடாக ஒரு பத்திரிகை வெளிவந்துகொண்டிருக்கிறது. அது இன்றுவரை யாழ். மக்களின் சாபக்கேடாகவே இருந்துவருகின்றது. அந்தப் பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனை அண்மையில் வெளிநாட்டு ஊடகமொன்று சந்திக்க வந்த போது, டக்ளஸ் தேவானந்தாவின் கதை முடிந்துவிட்டது. இனி எமது காட்டில்தான் காற்று வீசப் போகிறது எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் தேர்தல் நடைபெறப் போவதென்றால் பிரதான இரு வேட்பாளர்களையும் ஒரே மேடையில் விவாதிப்பதற்கு அந்நாட்டு ஊடகங்கள் ஏற்பாடு செய்கின்றன. அந்த மேடைத் தர்க்கம்தான் ஜனாதிபதித் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட நாகரீகமான இந்தப் பூமியில் வாழ்ந்துகொண்டு நாம் இன்றும்; ஒரு சாபக்கேடான ஊடகங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது ஒரு துர்ப்பாக்கிய நிலை என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒரயொரு பாராளுமன்ற ஆசனம் கிடைத்ததின் பின்னர் யாழ். மாவட்டத்தில் சில தமிழ் ஊடகங்கள் ஈ.பி.டி.பியின் கதை முடிந்துவிட்டது, ஈ.பி.டி.பிக்கு சாபக்கேடு சங்கு ஊதிவிட்டது என்று கொக்கரித்தன.

அனைத்தையும் தகர்த்தெறிந்து யார் போனால் என்ன, யார் வந்தால் என்ன எமது தோழர்கள் எம்முடன்தான் நிற்பார்கள் என்று இந்த மக்கள் கூட்டத்தைக் கூட்டி டக்ளஸ் தேவானந்தா இந்த மாநாட்டை நடத்திக்காட்டியிருக்கின்றார். நிச்சயமாக இது இங்குள்ள ஊடகங்களுக்கு ஒரு சவாலாகத்தான் இருக்கும்.

காலி மேதினக் கூட்டத்தில் தோழர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிவிட்டு வந்ததின் மறுநாள் ஊடகதினமன்று சரவணபவான் தலைமையில் தமது காரியாலயத்தில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்களைக் கொலை செய்தவர்கள் எல்லாம் உலாவித்திரிகிறார்கள் டக்ளஸ் தேவானந்தாவை குறித்த கூட்டத்திற்கும் கொலைகளுக்கும் எதுவித தொடர்புகளுமில்லாத ஒரு மனிதரை வலிய இழுத்து அங்கே கொக்கரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் எப்படி இந்த ஊடகங்கள் இங்கே வியாபித்திருக்கின்றன என்பதை நாம் நோக்க வேண்டும்.

கொழும்பிலிருந்து ஊடகங்கள் இங்கே வருகின்றன. கொழும்பில் இருந்து ஒளி ஒலிபரப்பாகின்ற வானொலிகள் தொலைக்காட்சிகள் இங்கு ஒலிக்கின்றன. அவற்றில் வெளிவருகின்ற செய்திகளுக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகின்ற செய்திகளும் இடையிலுள்ள வேறுபாடுகளை நீங்கள் சற்று உன்னிப்பாக அவதானித்தால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் இந்த சாபக்கேடுகளை வெறுத்து ஊடக தர்மத்தை மீறி தம்மை ஊடக தர்மர்கள் என்று சொல்பவர்களையெல்லாம் விலக்கி நியாயம் ஒன்றே தர்மம் ஒன்றே என்று செயற்படும்; டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்களைப் பலப்படுத்து வீர்களேயானால் நிச்சயமாக இதுமட்டுமல்ல இதைவிடப் பெரும் மக்கள் கூட்டத்துடன் இக்கட்சியையும் மக்களையும் வழிநடத்திச் செல்வாரென நம்பிக்கை தெரிவிக்கின்றேன் என தெரிவித்தார்.

Related posts: