மரண தண்டனை விவகாரம்: ஐ.நா செயலருக்கு ஜனாதிபதி விளக்கம்!

Saturday, June 29th, 2019

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொலைபேசி ஊடாக தொடர்பினை ஏற்படுத்தி மரண தண்டனையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலன்னறுவையில் இன்று இடம்பெறும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எதிர்காலத்தை காப்பாற்றுவதற்காகவும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திலிருந்து இலங்கையின் எதிர்கால தலைமுறையை காப்பாற்றுவதற்காகவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக மரணதண்டனையை நிறைவேற்றவேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும் எந்த தனிநபர் மீதான வெறுப்பு காரணமாகவும் கோபம் காரணமாகவும் நான் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் கைச்சாத்திடவில்லை என்றும் நாட்டையும் எதிர்கால தலைமுறையையும் காப்பாற்றுவதற்காகவே அந்த உத்தரவில் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: