தமிழ்  மக்களின் உரிமைகளை வென்றெடுக்க  கொள்கை மாறாது போராடி வரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா – வவுனியாவில் கட்சியின் தேசிய அமைப்பாளர்!

Sunday, December 10th, 2017

கடந்த காலங்களில் எமக்கு மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரங்களை கொண்டு நாம் பன்மடங்கு மக்கள் தேவைகளை நிறைவேற்றிக் காட்டியுள்ளோம். அதற்கு எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தென்னிலங்கை அரசுகளுடன் கொண்டிருந்த இணக்க அரசியலூடான அணுகு முறையின் வெற்றியே காரணம் என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் நான்கு உள்ளூராட்சி மன்ற கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சரியாகன அரசியல் பலத்தை எம்மிடம் வழங்கியிருக்கவில்லை. அனாலும் எமது செயலாளர் நாயகம் தென்பகுதியில் இருந்த அரசியல் தலைமைகளுடன் கொண்டிருந்த நேருக்கமான உறவும் தமிழ் மக்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையும் மட்டுமல்லாது அவரது ஆற்றலின் வெளிப்பாடுகளும் தான் இத்தகைய பெரும் மக்களுக்கான பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்க காரணமாக அமைந்தது.

ஆனால் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நீண்டகாலமாக முன்னெடுத்துவந்த இணக்க அரசியலின்பால் நுழைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்  அரசுக்கு சரணாகதியாகி மக்களது சேவைகளையும் தேவைகளையும் மறந்தவர்களாக தமது சுயநல அரசியலை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனால்தான் இன்று எமது மக்கள் நாளாந்தம் வீதிகளில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனாலும் தற்போது  மக்களுக்கு வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலினூடாக மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அகவே தமிழ்  மக்களின் உரிமைகளை வென்றெடுக்க பல சவால்களையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்து  கொள்கை மாறாது போராடி வரும் ஒரே தலைவராக இன்றும் மக்களுடன்  இருப்பவர்  டக்ளஸ் தேவானந்தா என்ற ஒருவர் மட்டுமே. இந்த சந்தர்ப்பத்தை மக்கள் சரிவர பயன்படுத்தி எமது கட்சியை பலப்படுத்துவார்களேயானால் மிக விரைவில் மக்கள்  தமது அடிப்படை தேவைகளை மட்டுமல்லாது வாழ்வியலுக்கான அனைத்து தேவைகளையும் பெற்று  நிம்மதியான வாழ்வைப்பெற்றுவாழ  நாம் வழிசமைத்துக் தருவோம் என்றார். இதன்போது கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன் உடனிருந்தனர்.

Related posts: