குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி – எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, April 23rd, 2024

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை எனவும் அது அது தேர்தலுக்கான இலக்கு அல்ல எனவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் நிகழ்வில் நேற்று (21) கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அரிசி விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை.

அரசாங்கம் மக்களுக்கு எதையாவது விநியோகித்தால் அது தேர்தலுக்கான இலக்கு என்றும், எதிர்க்கட்சிகள் எதையாவது விநியோகித்தால் அது அது சமூக சேவை என்றும் கூறும் எதிர்க்கட்சிகளின் மாட்டுக் கோட்பாட்டிற்கு மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் அமைச்சர் பிரசன்ன வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: