இந்துக்கள் தம்முடைய மதத்தைப் போன்று ஏனைய மதங்களையும் மதிப்பதில் முதன்மையானவர்களாக விளங்குகிறார்கள்: யாழ். இந்தியத் துணைத் தூதுவர் அ. நடராஜன் !

Friday, June 3rd, 2016

நான் ஒரு இந்துவாக இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகின்றேன். இலங்கையில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் எனப் பல மதங்களைப் பின்பற்றுவோர் வாழ்ந்து வந்தாலும் இந்துக்கள் தம்முடைய மதத்தைப் போன்று ஏனைய மதங்களையும் மதிப்பதில் முதன்மையானவர்களாக விளங்குகிறார்கள் எனத்  தெரிவித்தார் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் அ. நடராஜன்

அகில இலங்கை இந்துமாமன்றத்தின் வைரவிழா மலர் வெளியீட்டு விழா அண்மையில்  நல்லை ஆதீன மண்டபத்தில் மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன் தலைமையில் இடம்பெற்ற போது விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

அதிகமான மொழிகளைப் பேசுகின்றவர்கள் வசிக்கும் ஒரே நாடு இந்தியா. இந்தியாவில் வடிவமில்லாத பல மொழிகளும் பேசப்படுகின்றன. இவ்வாறு ஏராளமான  மொழிகள் இந்தியாவில் காணப்பட்ட போதும் தமிழ் மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதை எண்ணி நாங்கள் பெருமைப்படுகின்றோம். ஒரு மொழியைச் செம்மொழியாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் அது இலகுவான விடயமல்ல. அவ்வாறு தேர்ந்தேடுப்பதற்குச் சில சட்ட திட்டங்கள் காணப்படுகின்றன.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மொழி குறைந்த பட்சம் ஆயிரம் வருடங்களாவது இருந்திருக்க வேண்டும். ஆனால், நமது தாய்மொழியான தமிழ் மொழி கடந்த ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்தது என்பதை நினைக்கும் போதே உள்ளம் உவகையடகிறது.

Related posts:


இலங்கைக்கான கனடா வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் குருநகர் சுற்றுலாப் பயிற்சி மையத்திற்கு வி...
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் சிறிய ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிக்க விசேட வேலைத்திட்டம் - பெர...
தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக அரசாங்க தகவ...