சுற்றுலாவை மேம்படுத்த பெல்505 ரக உலங்குவானூர்தி!

Tuesday, May 3rd, 2016

இலங்கைக்கு பெல் ரக உலங்குவானூர்திகளை வழங்குவதற்கான உடன்படிக்கையில் பெல் ரக உலங்குவானூர்தி தயாரிப்பு நிறுவனமான டெக்ட்ரோன் நிறுவனம் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது.

இதன்படி இலங்கையின் தனியார் நிறுவனம் ஒன்று இந்த நிறுவனத்திடம் இருந்து பெல் 505 ரகஉலங்கவானூர்திகளை கொள்வனவு செய்யவுள்ளது.

இந்த உலங்குவானூர்திகள் இலங்கையின் தனிப்பட்ட பயணங்கள் மற்றும் சுற்றுலாத்துறையைமேம்படுத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன.

இந்த உலங்குவானூர்திகள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டிருப்பதால் பயணிகளை இந்த உலங்குவானூர்திகள் திருப்திப்படுத்தும் என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த உலங்குவானூர்திகள் மணித்தியாலத்துக்கு 125 கிலோமீற்றர் வேகத்தில்பயணிக்கக் கூடியவையாகும்.

Related posts:


மன்னார் கடல்படுகையில் காணப்படும் கனிய வளத்தை கொண்டு நாட்டின் 60 வருட எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய...
பாவனைக்குதவாத உலர் உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை - எச்சரிக்கை விடுக்கிறது பொதுச் சுகாதார பரிசோதக...
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத...