இலங்கைக்கான வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திர விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியது பஹ்ரெய்ன்!

Monday, June 14th, 2021

புதிய வேலை வாய்ப்புகளுக்கான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் செயற்பாட்டை இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு பஹ்ரெய்ன் அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.

அத்துடன் பஹ்ரெய்ன் மருத்துவ குழுவின் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் அடங்குகின்றன.

கடந்த மே மாதம் 24 ஆம் திகதிமுதல் குறித்த நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் வருவதற்கு பஹ்ரேய்ன் தடை விதித்துள்ளது.

எவ்வாறாயினும் அந்த நாட்டு பிரஜைகளுக்கு இந்த தடை செல்லுபடியாகதென தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எதிர்வரும் 25 ஆம் திகதிவரையில் நீடிக்க பஹ்ரெய்ன் மருத்துவ குழு அண்மையில் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: