சிசு இறப்பைக் குறைக்கும் நோக்கில் புதிய சுற்றறிக்கை!

Monday, February 6th, 2017

சிசு இறப்பு வீதத்தைக் குறைக்கும் நோக்கில் கர்ப்பணிகளை விடுதிகளில் சேர்ப்பது தொடர்பாக புதிய சுற்றறிக்கை சுகாதார சேவைகள் நாயாகத்தால் சகல சுகதார நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

காலம் முந்திய பிரசவ சிசுக்களின் சுகாதார நிலமைகளை மேம்படுத்தல்,பிரசவத்துக்குச் சற்று முன்னரான மற்றும் பிரசவத்தின் போது தரமான பராமரிப்பை உறுதிப்படுத்தல், பிரசவத்தின் போது கௌரவமான பராமரிப்பை உறுதிப்படுத்தல் போன்றை அதிகமாக எதிர்பாக்க்கப்படுகின்றன என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்ப்ப காலம் 24 வாரங்களுக்கு முன்னெரனில் பிரசவ அறிகுறிகளுடன் வரும் கர்ப்பிணிகளை நேரடியாக மகப்பேற்று விடுதியில் சேர்த்தல். கர்ப்ப காலம் 28 வாரங்களுக்கு மேல் வேறு நோய்களுடன் கர்ப்பிணிகள் சேர்க்கப்படும் போது பெண் நோயியல் விடுதிக்கு அனுப்பப்பட வேண்டும். கர்ப்காலம் 24 வாரங்களுக்கு உட்பட்டது எனில் மகப்பேற்று விடுதியில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

24-1429868516-baby-6000

Related posts: