அவசியமின்றி உணவுப்பொருட்களை சேமிக்க கூடாது – அமைச்சர் நளின் பெர்னாண்டோ கோரிக்கை!

Tuesday, June 7th, 2022

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனத்திடம் விசாரணை நடத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் –

அவசியமின்றி உணவுப்பொருட்களை சேமித்து வைக்கக் கூடாது எனவும், நுகர்வோர் இவ்வாறு தேவையற்ற சேகரிப்புகளை மேற்கொண்டால், அது சந்தையின் இயல்பு நிலையை பாதிக்கும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: