உயர்தர பரீட்சை தொடர்பில் இரண்டு மாற்று வழிகள் உண்டு : ஆனாலும் அவை குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, May 3rd, 2020

எதிர்வரும் ஜுன் மாதம் 16 ஆம் திகதிவரை பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளபோதிலும் அந்த தகவல்களில் எதுவித உண்மையும் கிடையாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மே மாதம் 1 1ஆம் திகதி இரண்டாம் கல்வி தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.

எனினும் நேற்றையதினம் பாடசாலை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை என சிறுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்வில் கருத்து தெரிவித்த போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவிருருக்கும் உயர்தர பரீட்சை தொடர்பில் சிறுவர்கள் பிரதமரிடம் வினவியபோது, அதற்கு இரண்டு மாற்று வழிகள் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் உயர்தர பரீட்சையின் திகதியை மாற்றுவது ஒரு வழியாகும் என்றும் கற்பித்து நிறைவு செய்த பாடங்களில் இருந்து மாத்திரம் கேள்விகளை தயாரிப்பது இரண்டாவது மாற்று நடவடிக்கையாகும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் இது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானத்திற்கு இன்னமும் வரவில்லை எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: