பொலித்தீனுக்கு மாற்றீடாக புதிய பொலித்தீன்!

Saturday, August 26th, 2017

பொலித்தீன் பொருட்களுக்கான தடையை அடுத்து அதற்கு மாற்றீடாக, உக்கக்கூடிய பொலித்தீன் வகையொன்று இனங்காணப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது

உணவுகளை சுற்றுவதற்காக பயன்படுத்தப்படும் பொலித்தீன், மளிகை பொருட்களை வாங்க மற்றும் பொருட்கள் கொள்வனவுகளுக்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் ரெஜிபோர்ம் பயன்படுத்தி உருவாக்கப்படும் உணவு பொதியிடல் பெட்டிகள் தடை செய்யப்படவுள்ளன.

பொலித்தீன்களை தடைசெய்யும் புதிய சட்டம் நவம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளது.மாற்றீடாக அறிமுகப்படுத்தப்படும் புதிய பொலித்தீன் 100 நாட்களுக்குள் உக்கி அழியக்கூடியது என, அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.இந்த புதிய பொலித்தீனை நவம்பர் முதலாம் திகதியிலிருந்து விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என, அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Related posts: