தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உயர்நதரப் பரீட்சை முடிவகள் வெளிவரும் –கல்வி அமைச்சு அறிவிப்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை போன்றவற்றை ஒத்திவைக்க இதுவரை முடிவுகள் எட்டப்படவில்லை என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்பதாக கொரோனா அச்சுறுத்தல் காரணமக பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் மாதம் குறித்த பரீட்சையை பரீட்சைத்திணைக்களம் வெற்றிகரமாக நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனுமதியின்றி கடலட்டை பிடித்த மீனவர்கள் இருவருக்கு 14 ஆயிரம் ரூபா தண்டம்!
ஏப்ரல் முதல் 1,000 ரூபாய் சம்பளம் - அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவிப்பு!
விமானங்கள் தரையிறங்கும் கட்டணம் குறைப்பு - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் அறிவிப்பு!
|
|