விமானங்கள் தரையிறங்கும் கட்டணம் குறைப்பு – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, June 7th, 2023

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் கட்டணத்தை ஒரு வருடத்திற்கு 50 வீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள்  கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் குறித்து விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்தள விமான நிலையத்திற்கு அதிகளவு விமானங்களை வரவழைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைவாக முதல் நான்கு வருடங்களில் விமான சேவை நிறுவனங்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் முதல் ஆண்டில் 100 சதவீதமும் இரண்டாம் ஆண்டில் 50 சதவீதமும் கட்டணத்தை தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அரசியலில் தமிழ் மக்கள் எப்போது விழிப்படைகின்றார்களோ அன்றுதான் உரிமைகளை வெற்றெடுத்த இனமாக தலைநிமிர மு...
சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட சீருடைத் தொகுதி நாட்டை வந்தடைந்தது - பாடசாலை சீருடைகள் மார்ச் மாதத...
சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படும் - கல்வி இராஜாங்க அமைச்சர் ...

70 மில்லியன் ரூபாய் முறைக்கேடு - நாமல் ராஜபக்சவை செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு...
பாலுக்காக வழங்கப்படும் கட்டணம் 200 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் - பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை!
அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோருவது எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதியுட...