அனுமதியின்றி கடலட்டை பிடித்த மீனவர்கள் இருவருக்கு 14 ஆயிரம் ரூபா தண்டம்!

Friday, July 20th, 2018

வேலணை கடற்பரப்பில் அனுமதி இன்றி கடல் அட்டை பிடித்த குருநகர் மீனவர்கள் இருவருக்கு 14 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்தது ஊர்காவற்றுறை நீதிமன்றம்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வேலணை கடற்பகுதியில் கடலட்டை பிடித்த குருநகர்ப் பகுதிப் படகை சோதனையிட்ட நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் அவர்களிடம் தொழில் புரிவதற்கான அனுமதி மற்றும் படகுக்கான பதிவுகள் இல்லாமையை கண்டுபிடித்தனர். அதனையடுத்து ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இருவருக்கும் 7 ஆயிரம் ரூபா வீதம் குற்றப்பணம் விதித்ததோடு படகு தொடர்பான விசாரணையை எதிர்வரும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு நீதிபதி அ.யூட்சன் ஒத்திவைத்தார்.

Related posts:

போக்குவரத்து மற்றும் சேவைக் கட்டணங்களில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி - எரிசக்தி அமைச்சர் கஞ்சன ...
விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கம் ஆரம்பிக்கும் – அமைச்சர் சுசில...
எதிர்வரும் புதனன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் – 13 ஆவது திருத்தம் மற்றும் தேசிய நல்லிணக்கம...