விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கம் ஆரம்பிக்கும் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நம்பிக்கை!

Wednesday, April 26th, 2023

பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு மிகவும் சாதகமான பதில் அனுப்பி இருக்கிறேன். அதனால் பெரும்பாலும் இன்றுமுதல் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தால் மதிப்பீட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.

அத்துடன் பத்து விடைத்தாள்களின் பிரதான பரிசோதகர்கள் தங்களின் கடமையை ஆரம்பித்திருப்பதாக பரீட்சை ஆணையாளர் தெரிவிவித்தார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது விடைத்தாள் பதிப்பீட்டு நடவடிக்கை தொடர்ந்து தாமதிக்கப்பட்டு வருவது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் வீரசுமன வீரசேகர எழுப்பிய இடையீட்டு கேள்வியொன்று பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து விடையளிக்கையில் –

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபடும் பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கத்தின் 4 கோரிக்கைகளில் 3 கோரிக்கைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்தேன். வரி தொடர்பான கோரிக்கையை திறைசேரிக்கு அனுப்பினேன்.

என்றாலும் பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கத்துடன் நான் தொடர்ந்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வந்தேன். எனது வரையறைக்குள் என்னால் முடிந்த தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.

என்றாலும் தற்போது கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை விடைத்தாள்களின் 10  விடைப்பத்திரங்களின் பிரதான பரிசோதகர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்திருந்தார். ஏனைய நடவடிக்கை நேற்று ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கத்தின் கடிதம் ஒன்றின் பிரதி ஒன்று எனக்கு கிடைக்கப்பெற்றது. அதில் பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு மிகவும் சாதகமான பதில் அனுப்பினேன். அதன் பிரகாரம் இந்த பிரச்சினை இன்றுடன் நிறைவடையும் என்றே பரீட்சை ஆணையாளர் என்னிடம் தெரிவித்தார் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிபபிடத்தக்கது

000

Related posts: