செனல் 4 காணொளி விவகாரம் – பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பின்னர் முறைப்பாடு – இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அறிவிப்பு!

Thursday, September 7th, 2023

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான செனல் 4 காணொளியில் தன்னை இணைத்து கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் காவல்துறைமா அதிபரின் ஆலோசனையின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

செனல் 4 ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முறைப்பாடொன்றை பதிவு செய்ய சென்றிருந்தார்.

எனினும், காவல்துறைமா அதிபருடன் கலந்தாலோசித்து, அவரது ஒப்புதலுடன் குறித்த முறைப்பாட்டை பதிவுசெய்யுமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.

இதற்கமைய, இன்றையதினம் அவரை சந்திப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளதாக பிள்ளையான் எனப்படும் சிவநேசதுறை சந்திரகாந்தன் நேற்று குறிப்பிட்டார்.

அத்துடன், செனல் 4 காணொளியில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபரான ஹன்சீர் அசாத் மௌலானா தன்னுடன் இணைந்து பணியாற்றியதாகவும், புகலிடத்தை பெறுவதற்காக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் சில பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனக் கூறி, குடும்பத்துடன் வெளிநாடு செல்ல அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றிருந்தார்.

ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாடு சென்ற அவர், இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

தான் 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்ததாகவும், சிறைக்கு இருந்து கொண்டு அசாத் மௌலானா கூறுவதை போன்று தாக்குதல் திட்டமொன்றை தீட்டுவது சாத்தியமற்றது என குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன், அவர் தொடர்பில் சர்வதேச அமைப்புகள் ஊடாக விசாரணையொன்றும் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான திட்டத்தை 24 மணிநேரத்தில் முன்வைக்க முடியுமா?...
இலங்கையுடனான நிதி தொடர்பான பேச்சுக்களை விரைவாக முடிக்க முடியும் - சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை!
கர்ப்பிணித்தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்தியது யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவ...