தனியார் பேருந்துகளுக்கு தேவையானளவு டீசலை முழுமையாக வழங்க இலங்கை போக்குவரத்து சபை முடிவு!

பயணிகள் போக்குவரத்துக்கான தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசலை முழுமையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், இன்றுமுதல் முழுமையாக பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது.
மேலும், இந்த தீர்மானத்தின் மூலம் பல நாட்கள் தொடர்ந்து தங்களது பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியும் என தனியார் பேருந்து ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மத்தியவங்கிக்கு புதிய துணை ஆளுநர் நியமனம்!
அரச நிறுவனங்களில் மேலதிக ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தத் தடை!
சீனாவின் எலிட் நிறுவனத்திடமிருந்து அறிக்கை..!
|
|