அரச நிறுவனங்களில் மேலதிக ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தத் தடை!
Wednesday, August 1st, 2018
அரசாங்க நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமானவர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான அங்கீகாரம் இன்றி அரச நிறுவனங்களுக்கான பணிக் குழுவினரை இணைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதற்கு மாற்றமாக ஆட்சேர்ப்புக்களை மேற்கொண்ட உரிய நிறுவனத்தின் தலைவர், மாகாண பிரதம செயலாளர், நிதிப் பிரிவின் தலைவர், அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என்று சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியோருக்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் அவசியம் யாழ்.அரச அதிபர் தெரிவிப...
20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறுவது உறுதி - பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டம்!
ஆங்கிலம் தொடர்பாடல் தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு மாகாண செயற்றிட்டம் ஆரம்பம்!
|
|
|


