இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியோருக்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் அவசியம் யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு!

Friday, November 25th, 2016

இந்தியாவில் இருந்து மீள்திரும்பியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம் என யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து அண்மையில் மீளத்திரும்பியவர்களின் பிரச்சினைகள், தேவைகள் குறித்து கேட்டறியும் கலந்துரையாடல் ஒன்று இலங்கை எதிலியர் மறுவாழ்வு கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் இருந்த இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள் தற்போது மீளக்குடியேறி வருகிறார்கள். இன்னும் ஒரு லட்சம் வரையானோர் அங்கு உள்ளனர். அவர்களும் இனிவரும் காலத்தில் படிப்படியாக இங்கு மீளக்குடியேறவுள்ளனர். நாடு திரும்பியவர்களுக்கு தேவையான உதவிகளை நாம் செய்து வருகிறோம். தற்போது வீட்டுத்திட்டம் வழங்கவுள்ளோம். அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய தேவை எமக்குள்ளது. அவர்களுக்குள்ள மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று காணி இல்லாத நிலை. அதனால் அவர்களுக்குரிய வீட்டுத்திட்டம் வழங்க முடியாத நிலையில் உள்ளோம். அவர்களுக்கான காணிகளை வழங்குவதற்கு தற்போது அரச காணிகள் எவையும் இங்கில்லை. அத்துடன் அவர்களுக்கான வாழ்வாதார செயற்பாடுகளை மீள அமைப்பதற்கு, வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். இங்கு வந்தவர்களை வசதியுடள் வாழவைத்தால்தான் மேலும் இந்தியாவில் உள்ள ஏனையோர் இங்கு மீள்குடியேறுவார்கள் அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இவ்வளவு காலமும் இந்நிய நாடு அவர்களை பாதுகாப்பாக வைத்திருந்தமைக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் இந்தியாவில் உள்ள எம்மக்களுக்கான நீண்ட கால உதவியை ஒபர் சிலோம் நிறுவனம் செய்த வருகின்றது. மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

vetanajakang987488956

Related posts: