இலங்கை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிர்ச்சித் தகவல்!

Monday, July 2nd, 2018

தொற்றா நோய் காரணமாக இலங்கையில் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மொத்த எண்ணிக்கையில் 75 சதவீதமானவர்கள் தொற்றா நோய் காரணமாகவே மரணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐக்கிய நாடுகளின் விசேட பிரிவொன்று இலங்கை வந்து ஆய்வொன்றை நடத்தினர்.
இதற்கமைய புகையிலை மற்றும் மதுபான பாவனையுடன் சுகாதாரமற்ற உணவு பழக்க வழக்கங்கள் காரணமாகவே இந்த மரணங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 உலகளாவிய புகையிலை பாவனை குறித்த அறிக்கையில் 29.4 சதவீதமானவர்கள் நாளாந்தம் புகைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: