நாட்டின் சர்வதேச கடன் வழங்குனர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்!

Friday, September 23rd, 2022

நாட்டின் சர்வதேச கடன் வழங்குனர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று முதன்முறையாக இன்று நடைபெறுவுள்ளது.

இந்த சந்திப்பானது இன்றுபிற்பகல் சூம் தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நிதி மற்றும் சொத்து மேலாண்மை ஆலோசனை நிறுவனமான Lazard மற்றும் அதன் சட்ட ஆலோசனைப் பணியை வழிநடத்தத் தெரிவு செய்யப்பட்ட  Clifford Chance ஆகியவற்றின் பிரதிநிதிகளும் குறித்த கலந்துரையாடலில் இணைந்துக்கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலானது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுனர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன தெரிவித்தார்.

இலங்கையினால் கடனை மீள செலுத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கான இலங்கையின் முயற்சியின் போது, கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாடுகளை எட்ட வேண்டியது அவசியமாகும்.

இந்தநிலையில், குறித்த கலந்துரையாடலில் இலங்கை, தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள கடன் தொகையின் கால எல்லையினை நீடிக்குமாறு அல்லது முதலில் ஒரு பகுதியை குறைக்குமாறு கோரும்.

அதற்கு, இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள சீனா இணங்காத பட்சத்தில் பாரிய பின்னடைவு ஏற்படக்கூடும்.

இருப்பினும், இன்றைய கலந்துரையாடல் இலங்கைக்கு மிகவும் தீர்மானமிக்கதாக அமைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுனர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts: