தனியார் பேருந்துகளில் கப்பம் பெறுவதனை தடுக்க புதிய திட்டம்!
Thursday, August 11th, 2016
தனியார் பேருந்துகளில் கப்பம் பெறுவதனை நிறுத்துவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது.
இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்திர தெரிவித்தார். கப்பம் பெறுவதனை தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தெடர்பில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளுக்கு தனியார் பேருந்துளில் இருந்து 15 கோடிக்கும் அதிகமான தொகை கப்பமாக பெறப்படுகின்றதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காதல் தொடர்பில் தெவரப்பெருமவின் வரைவிலக்கணம்!
யாழ். பல்கலையின் பிரதித் துணைவேந்தர் நியமனம்!
ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - அமைச்சர் நிமல் சிறிப...
|
|
|


