நாடு முழுவதிலும் சுமார் 600 போலி சாரதி பயிற்சி நிலையங்கள் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரிக்கை !

Sunday, December 24th, 2023

நாடு முழுவதிலும் சுமார் 600 போலி சாரதி பயிற்சி நிலையங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இயங்கி வரும் 1200 சாரதி பயிற்சி நிலையங்களில் 600 போலியானவை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படாது இந்த பயிற்சி நிலையங்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு போலியாக இயங்கி வரும் போலி சாரதி பயிற்சி நிலையங்கள் தொடர்பில் மாவட்ட மோட்டார் போக்குவரத்து பரிசோதகர்களுக்கு தெரியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனுமதியுடன் இயங்கி வரும் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை 600 எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அனுமதி பெற்றுக்கொண்ட பயிற்சி நிலையங்களின் பயிற்றுவிப்பாளர்களுக்கு பரீட்சை நடத்தப்படுவதாகவும், பயிற்சி வழங்கப்படுவதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


கால்நடை வளர்ப்பை மேம்படுத்துவதற்கு ரூபா 20 மில்லியன் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள உதவிப் பணிப...
பிரச்சினைகள் இருந்தால் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை - அதிகரிக்கும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்க...