ஆசிரியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு  வரும் அநீதிகளுக்குத் தீர்வு பெற்றுத் தரக் கோரி யாழில் தொடர்போராட்டம் முன்னெடுப்பு!

Monday, February 13th, 2017

வடமாகாணக் கல்வியமைச்சினால் ஆசிரியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு   வரும்  அநீதிகளுக்குத்  தீர்வு பெற்றுத் தரக் கோரித் தொடர்போராட்டம் இன்று திங்கட்கிழமை (13)  காலை யாழ்.செம்மணி வீதியிலுள்ள வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் அலுவலகத்துக்கு முன்பாக ஆரம்பமாகியுள்ளது.

கடந்த -10-01-2017  வெளிமாவட்ட சேவை நிபந்தனைக் காலத்தைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களால் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்ட ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் செயலாளரைத் தாக்கியதாகப்  பொய்யான ஜனநாயக விரோத குற்றச்சாட்டுக்களை வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் சுமத்தி அடிப்படையான விசாரணைகள் எதுவுமின்றி  மூன்று ஆசிரியர்களுக்கு பணித்தடை வழங்கப்பட்டது.

ஆனால், இன்றுவரை குறித்த ஆசிரியர்களை மீள இணைத்துக் கொள்வது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளையும் வடமாகாணக் கல்வியமைச்சு மேற்கொள்ளவில்லை. இந்த நிலையிலேயே தீர்வு கிடைக்கும் வரையான தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதாதைகளைத் தாங்கிப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

unnamed

unnamed (1)

Related posts: