தனியார்த்துறையின் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் – மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டு!
Tuesday, August 8th, 2023
நாட்டின் உண்மையான பொருளாதாரத்திற்கு நாணய கொள்கையின் பரிமாற்றம் இன்னும் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனியார்த்துறையின் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வீழ்ச்சியடைந்துள்ள பணவீக்கத்திற்கு ஏற்ப, கொள்கை வட்டி விகிதங்கள் மேலும் தளர்த்தப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி - வடக்கின் முதல்வர் சந்திப்ப ஒத்திவைப்பு!
2017 இல் இலங்கைக்கு கூடுதலான முதலீடுகள் - அமைச்சர் மஹிந்த அமரவீர!
மார்ச் 20க்கு முன் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதே திட்டம் - தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை விளக்...
|
|
|


