கழிவு முகாமைத்துவம் தொடர்பில் விசேட நிலையம்!

Saturday, April 29th, 2017

நாட்டில் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் விசேட நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததினால்   ஏற்பட்ட அனர்த்தம் குறித்து பாராளுமன்றத்தில் நடந்த விஷேட கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்

இதில்  அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உரையாற்றுகையில்,  மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 98 குடும்பங்களுக்கு விரைவில் புதிய வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் பாட்டலி  சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.

கழிவு முகாமைத்துவம் தொடர்பில் நிலையான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான நஷ்டஈடுகளும் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்த அனர்த்தத்திற்கான காரணத்தை ஆராய்வது பிரச்சினைக்காக தீர்வாக அமையாது என்று இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

கழிவு முகாமைத்துவம் தொடர்பில் முறையான வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார். பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டுவதில் ஏற்பட்ட தாமதமே இவ்வாறான பிரச்சினைகள் உருவாக காரணம் என்று உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.மரக்கார் தெரிவித்தார்.

Related posts: