தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 418 பேர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 418 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இதன்போது 48 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 77 ஆயிரத்து 543 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிளி. மாவட்ட பொது வைத்தியசாலைக்கு உள்ளக பயிற்சி மருத்துவர்கள் நியமனம்!
கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்ட பெண் இலங்கையின் பல பகுதிக்கும் சென்றமை உறுதி!
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழக்கும் நடவடிக்கையின் பின்னர் ஆகஸ்டில் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்...
|
|