டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி – தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
Sunday, May 21st, 2023
டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 150,000 ரூபாவாக குறைந்துள்ளதாக செட்டித் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
24 கரட் தங்கத்தின் பவுன் ஒன்றின் விலை 160,000 முதல் 165,000 ரூபா வரை இருந்ததாக தங்க வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் கடுமையான உயர்வு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகி வருவதுடன் 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை கடந்த இரண்டு வாரங்களுக்குள் 11 ஆயிரம் ரூபாவிற்கும் மேல் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் என்ன செய்கின்றனர்? - தினக்குரல் பத்திரிகை தாயகன்
கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு வாய்ப்பே இல்லை - கடற்படையின் ஊடகப் பேச்சாளர்!
யாழ் மாவட்டத்தில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!
|
|
|


