கொரோனோவின் பாதிப்பு; பணத்தை அள்ளி கொடுக்கும கோடீஸ்வரர்கள்!

Saturday, February 1st, 2020

கொரோனோ வைரஸால் சீனாவில் இருக்கும் மக்கள் அடுத்தடுத்து இறந்து கொண்டிருக்கும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக உலகின் பணக்காரர்கள் அந்நாட்டிற்கு உதவ முன்வந்துள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரம் தற்போது ஒரு அமைதி நகரமாக, ஒரு பேய் நகரம் என்று குறிப்பிட்டு வரும் அளவிற்கு ஆகிவிட்டது. ஏனெனில் கொரோனோ வைரஸ் அந்தளவிற்கு அங்கிருக்கும் உயிர்களை வாங்கி வருகிறது.

வேகமாக மற்றவர்களுக்கு இந்த நோய் பரவி வருவதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருகிறது. தற்போது வரை 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், உலகளவிற்கு ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனோவை கட்டுப்படுத்த, சீனாவில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட இரண்டு புதிய மருத்துவமனைகள், இதை எப்படி தடுப்பது என்பதற்காக ஆராய்ச்சி மையம் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை இந்த நோயை கட்டுப்படுத்த முடியவில்லை.

சீனா மட்டுமின்றி உலகில் இருக்கும் 16 நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு உள்ளது.

இந்நிலையில் சீனாவிற்கு உதவும் விதமாக அமெரிக்காவை சேர்ந்த உலக கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் பணத்தை வாரி வழங்கியுள்ளார்.

பில் கேட்ஸ் மற்றும் Melinda Gates அறக்கட்டளையும் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை சீனா மற்றும் ஆப்பிரிக்காவில் பரவி வரும் மர்ம நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த 10 மில்லியன் டொலர் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதில் சிகிச்சை மற்றும் தடுப்பூசி மேம்பாட்டிற்கு 5 மில்லியன் டொலர் அடங்கும் என்று தெரிவித்துள்ளது. இவரை தொடர்ந்து சீனாவின் இரண்டாவது கோடீஸ்வரரான ஜாக் மா 14 மில்லியன் டொலர் கொடுத்து உதவுவதாக அறிவித்துள்ளார்.

இதே போன்று சீனாவில் இருக்கும் மில்லியனர்களான Robin Li(Baidu), Ma Huateng(Tencent), Ren Zhengfei( Huawei ) மற்றும் Zhang Yiming(ByteDance) ஆகியோர் இணைந்து 115 மில்லியன் டொலர்கள் உதவியாக கொடுக்க முன் வந்துள்ளனர்.

இது புதிய சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகளுக்கு உதவுவதற்கும் உதவும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

இதே போன்று டெக்ஸ்டைல் உலகில் முக்கிய இடத்தை பிடித்துள்ள, LVMH நிறுவனத்தின் தலைவரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான பிரான்ஸை சேர்ந்த Bernard Arnault 2.3 மில்லியன் டொலர் வழங்க முடிவு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி சீனாவில் இருக்கும் தொண்டு கூட்டமைப்பிற்கு 1. 4 மில்லியன் டொலர் கொடுப்பதாக உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts: