டெங்கு’ நோய் அனர்த்த நிலையை ஏற்படுத்தும் – தடுப்பதற்காக அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவு வலியுறுத்து!

நாட்டில் ‘டெங்கு’ நோய் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
இது தொற்றுநோய் அனர்த்த நிலையை ஏற்படுத்தும் வகையில் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை கடந்த வருடத்தில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தொற்றைத் தடுப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை கடந்த 20ஆம் 21ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
சுத்தமான ‘சூழல் ஆரோக்கியமான சமூகம்’ என்ற தொனிப்பொருளில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மாகாண மற்றும் உள்ளராட்சி மன்ற அமைச்சு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளமை விசேட அம்சமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு ஜனாதிபதி!
தொற்றா நோய்களிலிருந்து அரச ஊழியரை காக்க நடவடிக்கை!
பன்மைத்துவத்திற்கான பட்டைய சாசனம் ஒன்றை உருவாக்கும் பொருட்டு இலங்கை சாமதனப்பேரவை ஆய்வு!
|
|