பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு ஜனாதிபதி!

Sunday, October 16th, 2016

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் BRICS பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதிய தோர்தோற்றைத்தக் குறிக்கும்; மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொண்டுள்ளார்.

பிரிக்ஸ் BRICS மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (15) அங்குபயணமானார்.

8 வது முறையாக நடைபெறும் இந்த மாநாட்டின் தலைமை பொறுப்பும் மாநாட்டை ஏற்று நடத்தும் பொறுப்பும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த மாநாட்டில்  கலந்துகொள்கிறார்.

கோவாவில்இந்த   மாநாடு நேற்றஆரம்பமானது

இந்தியா. சீனா ரஷ்யா பிரேசில் தென்ஆபிரிக்கா ஆகிய வளர்ச்சியடைந்துவரும் ஐம்பெரும் பொருளாதார நாடுகளும் பங்களாதேஷ் பூட்டான் இந்தியா மியன்மார் நேபாளம் தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய BIMSTEC  நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் தலைவர்களும் இம்மாநாட்டில் பங்குகொண்டுள்ளனர்.

‘எல்லாவற்றையு ம்உள்ளடக்கிய  கூட்டுத் தீர்வுகளை கட்டியெழுப்புதல்’  என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இம்மாநாட்டில் அபிவிருத்திவங்கி  சுகாதாரம் நிலைபேறான அபிவிருத்தி தூயமற்றும் பசுமை மின்சக்தி ஆகியதுறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

மொத்த உலக சனத்தொகையில் சுமார் அரைவாசி அளவு இந்த அமைப்பின் கீழ் வருவதுடன் இவ்வமைப்பில்அங்கத்துவம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் மொத்த பொருளாதாரத்தின் நிகரதேசிய உற்பத்தி 16.6 ரில்லியன் டொலர்களாகும்.  மொத்த வெளிநாட்டு  கையிருப்பு அளவு 4 ரில்லியன் அமெரிக்க டொலர்களைப் பார்க்கிலும் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக நிகரதேசிய உற்பத்தியில் 37 வீதத்தையும் உலக வியாபாரத்தில் 17 வீதத்தையும் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் கொண்டுள்ளன.

உலகில் பலம்மிக்க நாடுகளாக வருவதற்காக போட்டியிடும் முக்கிய நாடுகளுக்கு சமானமாக இந்த மாநாட்டில் மத்தியதர வருமானம் பெறும் ஒரு நாடாக இலங்கை இணைந்து கொண்டுள்ளது.

நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில்  இலங்கையின் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து உலகத்தலைவர்களுக்கு ஜனாதிபதி விளக்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பது இலங்கைக்கு அதிகம் நன்மை பயக்கக்கூடிய ஒன்றாகும்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் சம பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளுதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைப்பு உலக அரசியல்  பொருளாதாரதுறையில் விசேட கவனத்தைப் பெற்றுள்ளது.

சீன இந்தியா பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து 2009ஆம் ஆண்டு உருவாக்கிய BRICS அமைப்பில் 2010 ஆம் ஆண்டு தென்ஆபிரிக்காவும் இணைந்துகொண்டது.  அந்தநாடுகளின் ஆரம்ப எழுத்துக்களைப் பயன்படுத்தி  BRICS  என்ற பெயர் இந்த அமைப்புக்கு வழங்கப்படுகிறது. ஜனாதிபதி மாநாட்டில் பங்குபற்றும் பல்வேறு நாடுகளின் அரசதலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

d0c459c580e35b6f69e84ea72daf40e3_L

Related posts: