முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை சீரான முறையில் பராமரிக்க நடவடிக்கை – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் நாட்டுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 500 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே, எதிர்காலத்தில் நாடு எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து முச்சக்கரவண்டி தொழிற்துறையை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். பெற்றோல் நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: