ஜ. நா. அமைப்பின் சகல நிறுவனங்களுடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுவோம் – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன!

Thursday, March 25th, 2021

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும் ஜக்கிய நாடுகள் அமைப்பின் சகல நிறுவனங்களுடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுவதாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது.

இலங்கை இறைமை கொண்ட நாடாகும். அந்த நிலையை தொடர்ச்சியாக பாதுகாப்பதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையும் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் விசேட அறிக்கை ஒன்றை விடுத்து உரையாற்றினார்.

இந்த பிரேரணை தேவையற்ற ஒன்றாகும். இது இலங்கை சட்டத்திற்கு முரண்பட்டதாகும் என்று குறிப்பிட்ட அமைச்சர் இந்த பிரேரணைக்கு பேரவையில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் மீது நாடாளுமன்றில் விவாத நடத்த முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளார்..

Related posts: