ஜூன் 7 ஆம் திகதிவரை பயணக் கட்டுப்பாடுகள் நீடிப்பு – இராணுவத் தளபதி அறிவிப்பு!
Monday, May 24th, 2021
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2 நாட்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்பதாக கடந்த 21 ஆம் தகதி நாடு முழுவதும் நடமாட்ட கட்டுப்பாடு அமுல்ப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்துவருகின்றது.
இந்நிலையில் நாளை அதிகாலை 4 மணிக்கு குறித்த பயணத்தடை நீக்கப்பட்டு நாளையதினமே இரவு 11 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கும் கொரோனா தொற்றுறுதி - நெருக்கமாக தொடர்பை பேணியவர்களை கண்டறிய...
வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ தொற்றால் உயிரிழப்பு!
|
|
|


