நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கும் கொரோனா தொற்றுறுதி – நெருக்கமாக தொடர்பை பேணியவர்களை கண்டறிய சுகாதார தரப்பினர் நடவடிக்கை!

Sunday, January 10th, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

நான் இஶ்ரீகொவிட்-19 க்கு நேர்மறையானதை சோதித்தேன், ஆகவே தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்குள் நுழைகிளேன். கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த வாரம் கொரோனா தொற்றுக்குள்ளான 2 ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் ஆவார்.

முன்னதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கொரோனா தொற்றுக்குளுளான நிலையில் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தலில் உள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நாடாளுமன்றில் அவருடன் நெருக்கமாக தொடர்பை பேணியவர்கள் யார் என கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி ஹக்கீம் நாடாளுமன்றம் வருகை தந்திருந்தார். இந்த நிலையில் சி சி ரி வி காட்சிகளின் உதவியுடன் அவருடன் நெருக்கமாக தொடர்பை பேணியவர்கள் தொடர்பில் கண்டறியப்படவுள்ளது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இதேவேளை அடுத்தவாரம் நாடாளுமன்ற பணியாளர்கள் பி சி ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு அண்மையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரின் பிரத்தியேக செயலாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் 118 பேரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதாவது, தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய சமய பெரியார்கள் ஐந்து பேர் உட்பட ஹெட்டிப்பொலவிலுள்ள அலுவலகத்திற்கு மக்கள் சந்திப்பு தினத்தன்று சமுகமளித்த 75 பேரே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் அமைச்சரின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: