ஜீ.எஸ்.பி. பிளஸ்: தகுதியாய்வு செய்யும் அதிகாரிகள் இலங்கை வருகை!
Tuesday, April 11th, 2017
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தகுதி ஆய்வை மேற்கொள்ளும் வகையில் விஷேட பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டுக்கு வந்துள்ளனர்.
நாட்டில் நிலவும் அரசியல் நிலைத்தன்மை, மனித உரிமைகள் மற்றும தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட ஏதுநிலைகள் பலவற்றை அவர்கள் அவதானிக்கவுள்ளனர். ஏற்கனவே சில பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு வந்து கண்காணிப்புகளை மேற்கொண்டனர். அவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைககள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த வரிச்சலுகை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 19 ஆம் திகதி பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது
Related posts:
வித்தியா படுகொலை சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு!
ஞானசார தேரரை கைது செய்ய பல காவற்துறை குழுக்கள்!
உயர்தர பரீட்சையில் யாழ். இந்துவில் 56 மாணவர்களுக்கு 3 ஏ சித்தி - பரீட்சை மீளாய்வுகளை 5 ஆம் திகதிமுதல...
|
|
|


