ஜி.எல்.பீரிஸின் அமைச்சு பதவியில் மாற்றம் – வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி!

வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் கையொப்பமிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு வெளிநாட்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அவர் மீண்டும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாலாம் திகதிக்குப் பின்னரும் அரசியல் நெருக்கடி நீடிக்க வாய்ப்பு!
கல்வி அமைச்சு கோரிக்கை - 18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் நடவடிக்கை -...
அரசாங்கத்தின் உறுதிமொழியை மக்கள் துளியளவும் சந்தேகிக்கத் தேவையில்லை - அமைச்சர் பந்துல குணவர்த்தன உற...
|
|