அரசாங்கத்தின் உறுதிமொழியை மக்கள் துளியளவும் சந்தேகிக்கத் தேவையில்லை – அமைச்சர் பந்துல குணவர்த்தன உறுதி!

Tuesday, February 15th, 2022

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியத்திடமிருந்து 25 வீதம் மேலதிக வரி அறவிடப்பட மாட்டாது என அரசாங்கம் கூறியுள்ளது

நல்லாட்சி அரசினால் 2017 தேசியவரி வருமான சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மாற்றமே நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்படக் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

எனவே நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது இது தொடர்பான திருத்தங்கள் நிதி அமைச்சினால் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உறுதிமொழியை மக்கள் துளியளவும் சந்தேகிக்கத் தேவையில்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் மிகைக் கட்டண வரி விதிக்கப்படவுள்ள நிறுவனங்களில் EPF, ETF உள்ளிட்ட மேலும் 09 நிதியங்கள் உள்ளடங்கவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2020 மற்றும் 2021 மதிப்பீட்டு ஆண்டுகளில் 2,000 பில்லியனுக்கும் அதிகமான வரி அறவிடப்படக்கூடிய வருமானம் பெறும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடம் ஒரே தடவையில் 25 வீத மிகைக் கட்டண வரியே விதிக்கப்படுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான 69 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மிகைக் கட்டண வரி விதிக்கப்பதனூடாக 105 பில்லியன் ரூபா பெறப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: