ஜனாதிபதிக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை!

Monday, August 19th, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சாட்சியங்களை பதிவு செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னால் சாட்சியமளிக்க வருமாறு ஜனாதிபதிக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஆஸூ மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் –

ஜனாதிபதியை அழைப்பதற்கான கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்பதில் குழு உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளனர். நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ அதனை அனுப்புவார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தான் இந்த கடிதத்தை அனுப்பும் முன் சபாநாயகர் கரு ஜெயசூரியவுடன் கலந்துரையாட உள்ளதாக ஆனந்த குமாரஸ்ரீ தெரிவித்துள்ளார். என்ற போதும் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி இதுவரை ஜனாதிபதிக்கான கடிதம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் எனவும், அவ்வாறு அனுப்பப்பட்டிருக்காது விட்டால் அது பிழையான விடயம் என்றும் குழு உறுப்பினரான நளிந்த ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 20ஆம் திகதி குழு கூடும்போது உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் ஆகியோர் தமது சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளனர்.

Related posts:

பயண சீட்டுக்களை பெற்றுக் கொள்ளாத பயணிகளுக்கு நடவடிக்கை - மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையி...
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறப்பு : முதலாவதாக தரையிறங்கியது நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினருட...
எதிர்வரும் திங்கள்வரை மின் வெட்டு ஏற்படாது - மின் பாவனையில் சிக்கனம் பேணுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணை...