நாடு முழுவதும் குளிரான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம்!

Wednesday, January 2nd, 2019

நாடு முழுவதும், குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்தும் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனினும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, புத்தளம், கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts: