ஜப்பான் நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் !
Wednesday, April 26th, 2017
மீதொட்டமுல்ல அனர்த்ததிற்கான காரணம் மற்றும் இவ்வாறான அனர்த்தம் மீண்டும் ஏற்படுவதை தவிர்த்தல் என்பனவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இலங்கை வந்திருந்த ஜப்பான் நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான குறுக்கால தீர்வாக குப்பை மேட்டினை பொலித்தீனினால் மறைக்கவும் மலையை போன்று அதனை அமைத்து புவி ஈர்ப்புக்கு ஏற்ற வகையில் அதனை ஒழுங்கு படுத்துவது அவசியமாகும். குப்பை மேட்டின் அளவை குறைத்து மீள் சுழற்சி, வலுசக்தி மற்றும் சேதன பசளை உற்பத்திகளுக்காக பயன்படுத்துவதற்கான யோசனையும் இதில் முன்மொழியப்பட்டுள்ளது.
அனர்த்தம் இடம்பெற்று குறுகிய காலத்திற்குள் இலங்கை வந்து விரிவான முறையில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பான் குழுவுக்கு நன்றி தெரிவித்தார். மனிதாபிமான நெருக்கடியாக மாறியிருக்கும் இந்த சம்பவத்தை அரசியல் நெருக்கடியாக மாற்றிக் கொண்டிருப்பதாகவும் இதன் போது ஜனாதிபதி கூறினார். இலங்கையின் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண ஜப்பான் அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Related posts:
|
|
|


