யாழில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு!

Wednesday, July 4th, 2018

யாழ் மாவட்டத்தில் கடந்தவருடம் க.பொ.த உயர்தர பரீட்சையில் தேசிய ரீதியில் சிறப்பான முறையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது இரு மாணவர்களுக்கும் மாணவியொருவருக்கும் யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையத்தின் ஏற்பாட்டில் உதவிகள் வழங்கப்பட்டன.
யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தினால் மாகொல லயன்ஸ் கழகத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய மாகொல லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் 3 மடிக் கணனிகள் மற்றும் மாதாந்தம் புலமைப்பரிசு பணமாக ரூபா 5000 இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
யாழ் ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த ஸ்ரீதரன் துவாகரன் (தேசிய ரீதியாக உடல் அறிவியல் பாடத்தில் முதலாவது இடம்), புனித பெட்ரிக் கல்லூரியைச் சேர்ந்த ஆர்.டி.ஜே போல் ஜன்சன் (தேசிய ரீதியாக உடல் அறிவியல் பாடத்தில் மூன்றாவது இடம்), யாழ் வேம்படி மகளீர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி கமலேஸ்வரி செந்தில்நாதன் (தேசிய ரீதியாக உயிரியல் தொழில்நுட்ப பாடத்தில் மூன்றாவது இடம்) ஆகியோருக்கு இவ்வாறு பரிசில்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகள் மற்றும் இராணுவத்தினர் கலந்து கொண்டனர்.

Related posts: